Tuesday, June 25, 2013

25-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

25-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௧௧(11)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 176

பொருட்பால்துறவற இயல் நல்லினம் சேர்தல்

உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD)

ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;

குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,

குன்றன்னார் கேண்மை கொளின்.

 

பெரியோரைச் சேர்ந்த சிறியோருஞ் சிறப்படைவர்.

பொருள்:    

ஒள் கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின்முயலும் தொழப்படும் - இனிய கதிர்களையுடைய ஒள்ளியதிங்களைச் சேர்தலால் அழகிய இடமகன்றவானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்;குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர்குன்றன்னார் கேண்மை கொளின் - ஆதலால், குறைந்தநிலைமையுடையராயினும் மக்கள் மலைபோன்றபெருமையுடைய நல்லாரது நேயத்தை யடைந்தால்நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.

Explanation (G. U. POPE):

The hare in the moon is worshipped.

Because it is in the bright-beamed moon the very hare in heaven's lofty fair expanse is worshipped. Though scant their worthiness, men obtain worth who share friendship with those firm as a hill.

உங்களுக்குத் தெரியுமா?

சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் எளிதாக இறக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சுமைதாங்கி பொதுவாகப் பாதை ஓரங்களில் அமைக்கப்படுகின்றது.

சுமைதாங்கியின் தேவை

பல வகை உந்துக்களும், ஈருருளிகளும், இன்னும் பல்வேறு வகையான தன்னியக்க வண்டிகளும் அறிமுகப்படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்திப் பொருட்களைத் தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும்.

அமைப்பு

சுமைதாங்கி, ஏறத்தாழ நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல், இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அமைவிடம்

சுமைதாங்கிகள், பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறு வசதிகளுடன் சேர்த்தும் இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு.

அறச் செயல்

தற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

யாருக்கு ஆதரவு? காங்கிரஸ் இன்று முடிவு  -தினமணி

ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட விஜயகாந்தை அனுமதிக்க கூடாது ... -  தினமலர்

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும்: அத்வானி-  தினமலர்

காங்கிரஸ் சார்பில் 24 லாரிகளில் நிவாரணப் பொருள்கள்: சோனியா ... - தினமணி

தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா கவலைக்கிடம்தினகரன்

அன்னிய நிறுவனங்கள்: ரூ.24,163கோடிக்கு பங்கு விற்பனை - தினமலர்

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் 8 வீரர்கள் சாவு  - தினமணி

ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை அதிகாரிகள் ....- தினமலர்

கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்து உயிர் பிழைத்த நபர் - தின பூமி

முத்தரப்புத் தொடர்: பதானுக்குப் பதில் சமி அஹமது  -  தினமணி

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து நைஜீரியாவை வீழ்த்தியது ...-  தினகரன்

 மணமகன் / மணமகள் தேவை 

Required groom for Delhi Iyer girl – M.Sc - age 22 ½ years. Preference Delhi & NCR. For details and horoscope contact : akbamesr@gmail.com

வீடு வாடகைக்கு

Two bedroom flat with two attached bathrooms and one store room available for rent in Allahabad Apartments (Near New Ashok Nagar Metro station). Please contact 9810989541.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/06/13

6.30 PM

Delhi Tamil Sangam

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

19.07.2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26.07.2013

Sahambari Alankaram

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment