20-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௬(6)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 70
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் உங்கள் கவனத்தை ஒட்டுமொத்தமாக முதல் குழந்தையிடமிருந்து விலக்கி விடாதீர்கள். இது பெரும்பாலான பெற்றோர் செய்யும் மாபெரும் தவறு. இதனால் முதல் குழந்தையின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும். இரண்டாவது குழந்தையை மூத்த குழந்தை வெறுக்கவும் இது காரணமாகிவிடும். எப்போதும் முதல் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாவது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பையும் அதனிடமே கொடுங்கள் .
நாளொரு நாலடி – 145
பொருட்பால்– துறவற இயல்–குடிப்பிறப்பு
நூல்களைக் கற்றல் (LEARNING)
கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம், - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார்.
இழிகுடியிற் பிறந்தார் கல்லாமை முதலியவற்றிற்கஞ்சார்; ஆதலால் ஓரறிவுயிரினுங் கடை ஆவார்.
பொருள்:
கல்லாமை அச்சம்,கயவர் தொழில் அச்சம், சொல்லாமை யுள்ளும் ஓர்சோர்வு அச்சம். எல்லாம் இரப்பார்க்கு ஒன்றுஈயாமை அச்சம் - உயர்குடிப் பிறந்தார்க்குப்,படியாமை ஓர் அச்சம், கீழோர் தொழிலொன்றுசெய்தலும் அச்சம், சொல்லத் தகாதவற்றுள்தவறிச் சொல்லிவிடுதலொன்றும் அச்சம்,இரப்பார்க்கு ஒன்று ஈயாமை முழுவதும் அச்சம்; இம்மாணாக் குடிப் பிறந்தார் மரத்தார் - இவ்வாறுமாட்சிமையில்லா உயர் குடியிற் பிறந்தார்,நடுக்கடலில் மரக்கலத்திற் செல்வாரைஒத்தவராவர்
Explanation (G. U. POPE):
These four pious fears exist only among the really worthy.
Dread of unlearned ignorance ; dread of the work that base men do ; dread of forgetful slip in words which one must not utter ; dread of not giving to those that ask those who are born of a race not so distinguished by conscientious fears are as trees.
உங்களுக்குத் தெரியுமா?
சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர்.
கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை அறிய முடிகிறது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
தெலங்கானா: காங்கிரஸ் தலைமைக்கு மே 30 வரை எம்.பி.க்கள் கெடு - தினமணி
4 ஆண்டு நிறைவு செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு: செயலறிக்கை சமர்ப்பிக்கிறார் பிரதமர் - தினமணி
பழமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை- தினமலர்
ஈழத்துக்கு ஆதரவாக பலம்மிக்க நாடுகளைக் கொண்டுவருவதுதான் ...- அந்திமழை
இரு உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு- தினமலர்
எவரெஸ்ட் சிகரம் ஏறி சவுதி பெண் சாதனை- தினகரன்
மாவட்ட பஞ்.,தலைவர் கார் பறிமுதல்: போலீஸார் அதிரடி- தினமலர்
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: ஓட்டுப்பதிவு 70 சதவீதம்- தினமலர்
4 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது சென்னையில் கேன் ... - தினகரன்
சேவை வரி செலுத்த தவறினால் 7 ஆண்டு சிறை தண்டனை- தினமலர்
எல்லையில் அமைதி குலைந்தால் உறவு பாதிக்கும்: சீனாவுக்கு ...- தினமணி
பாகிஸ்தானில் இம்ரான் கட்சி பெண் நிர்வாகி சுட்டுக் கொலை.- தினகரன்
ஐபிஎல்: வீரர்களை கண்காணிக்க ஊழல் தடுப்பு அதிகாரிகள் - தினமணி
மீண்டும் நடால் சாம்பியன் - விளையாட்டு - Dinamalar
உலகக் கோப்பை வில்வித்தை: தீபிகா குமாரிக்கு இரு வெள்ளி- தினமணி
சென்னையை வீழ்த்தியது பெங்களூரு; விராட் கோலி அபார ஆட்டம்- வெப்துனியா
மணமகன் / மணமகள் தேவை
Asha Kamesh, 31/12/1985(27yrs), Place of Birth: New Delhi, Qualifications: B Sc (H).Com Science from Delhi University, MCA from IP University, Currently working in MNC in Greater Noida as a Software Engineer, Gothram: Haritha, Brahacharanam], Star: Makam, Birth time: 11.11 am, Balance dasa: Kethu 6y 3m 2d, looking for a match preferably an Engineer or equivalent and should be between 29 to 32 years. Bharat Matrimony ID: M 3091215, for further details contact Kamesh 7838460889(M)/25289761(R).
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
25/05/13 &
26/05/13
Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.
17th LAKSHMI NRUSIMHA
JAYANTHI UTSAVAM
9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja
4.00 to 5.30 pm
Vishnu Sahasranamam and Lalitha Sahasranama
Parayanam led by Sri Vishnu Sahasranama
Satsangam, Mayur Vihar (Phase III)
6.00 to 7.30 pm
Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,
Hyderabad. Vocal Support by Shri Sriram, Hyderabad.
26/05/13
8.00 to 9.30 am
Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar
(Phase III)
10.00 am
SITA KALYANAM & Aanjaneya Utsavam
1.30 pm Maha Deeparadhana
Shree Vishnu Sahasranama
Namasankirtana Mandali, Delhi
22621981
43041977
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
20-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment