Wednesday, June 5, 2013

05-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

05-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௨(22)புதன் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 84

மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத, அவர்கள் எடுக்க முடியாத இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் பெரியவர்களுடைய மருந்தை சாப்பிட்டுவிட்டால் சிக்கலாகிவிடும்.

நாளொரு நாலடி 159

பொருட்பால்துறவற இயல்மேன்மக்கள்

மேலோரது தன்மை (GREAT MEN)

பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை

என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும்

வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்

காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.

 

கீழோர் தம்மோடொருவர் நெடுநாட்பழகினும் அவரைநன்கு மதியார்; மேலோர் கண்ட அன்றுபோல் என்றும் நன்குமதிப்பார்.

பொருள்:    

பல் நாளும்சென்றக்கால் - பலமுறையும் ஒருவர் சென்றால்,'பண்பிலார் - நற்பண்பில்லாத கீழ் மக்கள், தம்உழை என்னானும் வேண்டுப என்று இகழ்ப - தம்மிடம்ஏதாவது உதவி வேண்டுவார் என்று அவரை அவமதிப்பர்;விழுமியோர் - ஆனால் மேன்மக்கள், என்னானும்வேண்டினும் நன்று என்று - அவர் ஏதாவது உதவிவிரும்பினாலும் நல்லது என்று கருதி, காண்டொறும்செய்வர் சிறப்பு - அவரைப்பார்க்கும்போதெல்லாம் பெருமை செய்வர்.

Explanation (G. U. POPE):

Seek the good, they are always kind.

They who are destitute of kindly courtesy, even after the lapse of many days, will contemn(those that visit them), saying, 'they will ask something of us.' The excellent will treat them with distinction whenever they see them, saying, ' if they ask something of us, it is well.'.

உங்களுக்குத் தெரியுமா?

சிறீ மகாபோதி (Sri Maha Bodhi) என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.

 

இது நில மட்டத்திலிருந்து 6.5 மீட்டர் உயரமான சமதரையில் நடப்பட்டுள்ளது. சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்தர்களினால் மிகப் புனிதமாக மதிக்கப்படும் பௌத்த சின்னம் இதுவே என்பதுடன் உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களாலும் இது பெரிதும் மதிக்கப்படுகின்றது. இதைச் சுற்றியுள்ள சுவர், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்னும் அரசன் காலத்தில், இம் மரத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

 

புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கிமு மூன்றாம் நூற்றாண்டில், அசோகப் பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியும் ஆன சங்கமித்தை என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மகாபோதி மரம், அனுராதபுரத்திலிருந்த மகாமேகவண்ண பூங்காவில் இலங்கை அரசன் தேவநம்பியதீசன் என்பவனால் நடப்பட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மாநிலங்களவை: தமிழகத்தில் ஆறு இடங்களுக்கு ஜூன் 27 தேர்தல்  - தினமணி

நான் முதல்வரானால் 15 நாள்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு: முலாயம் சிங்  வு-  தினமணி

பன்சாலிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை- தினமணி

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் இன்று பதவியேற்பு-  தினகரன்

தவறான விளம்பரம் தரும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சிறை - தினமணி

ஈரான் கரன்சி மீது அமெரிக்கா தடை-  தினமலர்

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் மீது ... - தினமணி

விமானம் தொடர் ரத்து; வயதான தம்பதியர் பாதிப்பு: "ஏர் - இந்தியா' ரூ.80 ... - தினமலர்

மேட்ச் ஃபிக்ஸிங்: வங்கதேச கிரிக்கெட் வீரர் அஷ்ரஃபுல் சஸ்பெண்ட் - தினமணி

ஐ பி எல் போட்டி முறைகேடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கும் ... - பிபிசி

இந்தியா அபார வெற்றி- தினமணி

பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் செரீனா -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

05/06/13

7.00 PM onwards

 

India Habitat Centre, New Delhi

Bharatanatyam Recital by  Justin Mccarthy

7.45 PM

Nauka Charitramu

India Habitat Centre in collaboration with  Yadartha

 

08/06/13

6.00 PM

Delhi Tamil Sangam

திருப்பதி திருச்சானூர்  பஞ்சஜன்யா குழுவினர் வழங்கும் வாத்திய சம்மேளனம்

Delhi Tamil Sangam

9811937936

9810271676

09/06/13

 

5.00 PM

செல்வி சுஷ்மா சோமசேகரன் வழங்கும் தமிழிசை

6.30 PM

இளைய பாரதம்

செல்வி சுகன்யா  வழங்கும் பரதநாட்டியம்.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment