28-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 179 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நல்லினம் சேர்தல் உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD) நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும்.
நெல்லைப்போலத் தங்குலத்தினது நன்மையாற் சான்றவர் ஆவார்கள்; தீயவர்கூட்டத்திற் சேரின் தஞ்சால்புடைமை கெடும். பொருள்: நிலநலத்தால் நந்தியநெல்லேபோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர்சான்றோர் - நிலத்தின் வளத்தினாற் செழித்துவளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மையுடையோராவர்; கலநலத்தைத் தீவளி சென்றுசிதைத்தாங்கு - மரக்கலத்தின் வலிமையைக்கொடியபுயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல,சான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் - தீயஇனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மைஅழியும். Explanation (G. U. POPE): Good tribal associations maintain excellence, and evil ones wreck it. As Nel that flourishes through the goodness of the soil, good men become illustrious by the excellence of their respective clanships. Goodness perishes when it comes near evil associates, as the tornado advances and destroys the excellence of the ship. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சாமுராய் வர்க்கத்தினர் தொழில்மயமாக்கத்திற்கு முற்பட்ட ஜப்பானிய படைத்துறையில் இடம்பெற்ற ஒரு குழுவினர். கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை ஜப்பானிய படைத்துறையின் முதுகெலும்பாய் இருந்தவர்கள். ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, போரில் தோல்வி ஏற்பட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் கையால் மாய்த்துக் கொள்வது போன்ற கட்டுக்கோப்பான சட்ட திட்டங்களுக்காகவும் போர்த் திறனுக்காகவும் இவர்கள் பரவலாக அறியப்பட்டனர். ஜப்பானின் அரசியலில் பல நூற்றாண்டுகளுக்கு சாமுராய் குழுக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. படத்தில் ஒரு கவசமணிந்த சாமுராய் தன் நீண்ட வாளை உருவிய வண்ணம் நிற்கிறார். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேர் வெற்றி - தினமணி அரபு நாடுகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் - தினமணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் கனமழை..! - தின பூமி ஆஸி. பிரதமராக பதவியேற்றார் கெவின் ருட் – தினமலர் காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்தினாலும் கூட்டணிக்கு தயார் - தின பூமி மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை பணிநீக்கம்- தினமணி சச்சினை நெருங்கும் குக்: சொல்கிறார் பீட்டர்சன் - யாஹூ! அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில் இப்போது தடை - தினகரன் சி.பி.ஐ.க்கு தன்னாட்சி: அமைச்சர் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் - தினமணி அபு சலீம் மீது சிறையில் தாக்குதல் - தினமணி கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து பைனலுக்கு முன்னேறியது ... - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Aravind Srinivas, BA, Height: 170 cm, Native: Palakkad, Kerala, Profession: Looking after Hospitality Services of the guest house and MDC of leading automobile Company based at Pant Nagar, Uttaranchal and Alwar, Rajasthan.For further details contact: divyaiyer91@gmail.com / Prakashnarayanan63@yahoo.com | |||||
வீடு வாடைகைக்கு | |||||
Two bed-room flat available for rent in Sector 9, Dwarka at Shree Radha Aptts. Rent expected: 18K + maintenance charges. For further details contact Mr. A.H. Rao, [Cell: 9810923410]. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28/062013 6:00 PM to 7.00 PM | Media Centre Auditorium, 3 Rajendra Prasad Road, IGNCA. | Screening of film Mudiyettu and Kalamezhuthum Pattum. | IGNCA Film Circle |
| |
29/06/13 6.30 PM | Delhi Tamil Sangam | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
04/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, Rohini | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, June 28, 2013
28-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment